ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு அறிக்கை - அனுமதி கொடுத்த நீதிமன்றம்

x

பெங்களூருவை சேர்ந்த ஆர் டி ஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடக் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி மோகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் கிரண் ஜவலி, தமிழக லஞ்ச ஒழிப்பு சார்பில் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழ் வேந்தன் ஆகியோர் ஆஜராயினர். அப்போது புகழ் வேந்தன், ஜெயலலிதாவின் சொத்துக்களை மதிப்பீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 40 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து நீதிபதி, 40 நாட்கள் கால அவகாசம் வழங்குவதாகவும், இதுவே கடைசி கால அவகாசம் என்றும் கூறினார். தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 16-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்