ஹிந்து பரிஷத் அமைப்பு ஊர்வலம்... 144 தடை உத்தரவு | Haryana
அரியானாவின் நூ மாவட்டத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதால், 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நூ மாவட்டத்தில் கடந்த மாதம் வன்முறை வெடித்ததால், தற்போது ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாரும் ஊர்வலம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்திள்ள மாவட்ட நிர்வாகம், கல்வி நிறுவனங்கள், வங்கிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. காவல்துறை, ராணுவம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறும் என்று விஷ்வ ஹிந்து பரிஷ்த் அமைப்பு தெரிவித்துள்ளது.
Next Story