"இளைஞர்களுக்கு மாரடைப்பு அதிகரிப்பு" - அமைச்சர் தகவல்
இதயம் காப்போம் திட்டத்தின் மூலம் 10 ஆயிரத்து 999 மருத்துவமனைகளில் 14 வகை மருந்துகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்று பேசிய அமைச்சர்,
கொரோனா காலத்திற்குப் பின்னர் மாரடைப்பு நோய் இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது என்றார். இதனை தடுக்க தமிழக முதலமைச்சரால் புதிதாக தொடங்கப்பட்ட இதயம் காப்போம் திட்டத்தின் மூலம், கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Next Story