"2014ல் நான் எடுத்த உறுதிமொழி இது தான்.." - ரகசியத்தை போட்டுடைத்த மோடி
குஜராத் மாநிலம் துவாரகாவில் 4 ஆயிரத்து 150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, பிரதமர் அடிக்கல் நாட்டினார். பின்னர் மேடையில் பேசிய மோடி, நீண்ட காலம் இந்தியாவை ஆண்ட கட்சிக்கு, சாதாரண குடிமக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று குற்றம்சாட்டினார். 2014 ஆம் ஆண்டில் மக்கள் என்னை டெல்லிக்கு அனுப்பிய போது, நாட்டைக் கொள்ளையடிக்க விடமாட்டேன் என்று உறுதியளித்தேன் என்றும், அதை தற்போது போது செயல்படுத்தி வருவதாக கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பல ஆயிரம் கோடி ஊழல்கள், தற்போது பாஜக தலைமையிலான ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி கூறினார்.
Next Story