"மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களுக்கு" - அமைச்சர்கள் கே.என்.நேரு சொன்ன தகவல்
எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும், ஸ்டாலின் தொடர்ந்து முதலமைச்சராக இருக்க வேண்டுமென, கோயிலில் வழிபட்டதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலை மற்றும் கலைஞர் சிலைக்கும் மாலை அணிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களுக்கு 3 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Next Story