"பிப்.08" - தேதி குறித்த அண்ணாமலை வெளியான பரபரப்பு அறிக்கை

x

தமிழக பா.ஜ.கவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாமென, மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க. சகோதர, சகோதரிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். தமிழக பா.ஜ.கவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்றும், நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பா.ஜ.க கொடிக்கம்பங்கள் நடப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பத்தாயிரமாவது கொடி கம்பம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் விவின் பாஸ்கரன் முன்னிலையில், கொடிக்கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்