ED குறித்து பாய்ந்து வந்த கேள்வி..அசராமல் பதில் சொன்ன மோடி
அமலாக்கத்துறை தொடர்பாக எதிர்கட்சிகள் தன் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் உள்ளது என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.தேர்தல் நிலவரம் பற்றியும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விசியங்கள் பற்றி ANI செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோதி நேர்காணல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளை ஒடுக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர், இந்த குப்பைகளை வீசுபவர்களிடம் தான் இந்த
கேள்வியை கேட்க வேண்டும் என்றார். அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டிற்கு என்ன ஆதாரம் உள்ளது என கேள்வி எழுப்பினார். தன் மீது வீசப்படும் இத்தகைய குப்பைகளை உரமாக மாற்றி நாட்டிற்கு சில நல்ல விஷயங்களை உருவாக்குவேன் என தெரிவித்தார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பத்தாண்டு
கால ஆட்சியில் வெறும் 34 லட்சம் ரூபாய் மட்டுமே அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தன்னுடைய தலைமையிலான பத்தாண்டு கால ஆட்சியில், 2 ஆயிரத்து 200 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.