"எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் ஒரே குறி இதுதான்".. துரை வைகோ குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், மக்கள் நல திட்டங்களை மாநில அரசு செயல்படுத்திவிட கூடாது என்ற ஒரே நோக்கில், மத்திய அரசு செயல்பட்டு வருவதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இளையோர் தேர்தல் பயிலரங்கம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ,
தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து அநீதி இழைக்கும் மத்திய அரசுக்கு, வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
Next Story