டிரம்பை தோற்கடித்த கமலாவின் கம்மல்?.. ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. - அமெரிக்காவில் புதிய பிரச்சனை
நேரடி விவாதத்தில் டிரம்பை கார்னர் செய்த கமலா ஹாரீஸ் அணிந்திருந்த கம்மல், கம்மலே கிடையாது அது இயர்போன் என்று டிரம்ப் கட்சியினர் போர்க் கொடி தூக்கியுள்ளார்கள். அவர்கள், ஜெர்மனி நிறுவன இயர் போனை கமலா ஹாரிஸ் அணிந்திருக்கலாம் எனவும் கூறி வருகிறார்கள். அவர்கள் குறிப்பிடும் NOVA நிறுவனம், கம்மல் போன்ற இயர்போனை தயாரித்து சந்தையில் வெளியிட்டுள்ளது.
அதுவும் கிட்டத்தட்ட கமலா ஹாரீஸ் அணிந்திருந்த கம்மல் போலவே இருக்கிறது. இந்த சூழலில் NOVA நிறுவன அதிகாரி, கமலா ஹாரீஸ் தங்களுடைய இயர் போனை பயன்படுத்துகிறாரா? என்பது தெரியாது என்றும் தங்கள் தயாரிப்புகள் அமெரிக்க அதிபர் விவாதத்திற்கு வடிவமைக்கப்படவில்லை என்றும் ஆனால் அதற்கு ஏற்றதுதான் என்றும் கூறியிருக்கிறார். கடைசி வரையில் கமலா அணிந்திருந்தது கம்மலா...? இயர்போனா? என்று சொல்லாதவர், ஆண்களுக்காகவும் கம்மல் போன்ற இயர்போனை தயாரித்து வருவதாகவும், விரைவில் டிரம்ப் பிரச்சாரத்திற்காக வழங்க முடியும் என மார்க்கெட்டிங் தந்திரத்தை வெளிக்காட்டியிருக்கிறார். ஆனால் தங்க வளையத்தில் முத்து பதித்த கம்மலை கமலா ஹாரீஸ் அணிவதை வழக்கமாக கொண்டவர் என்ற பேச்சும் நிலவுகிறது