அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாக அமைச்சர் துரைமுருகனுக்கு சளி, இருமல் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் துரைமுருகனுக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவக் குழுவினர் வழங்கி வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story