"க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது...இனியும்.." - அண்ணாமலை பரபரப்பு அறிக்கை | Annamalai
திமுகவின் கபட நாடகம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறி நடந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையின் கைது நடவடிக்கைகளைக் கண்டு பின்வாங்காமல், அனைவரும் உணர்வுடன் போராடியது ஆட்சியில் இருப்பவர்களை அசைத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு, இந்து சமயத்தை ஒழிப்போம் என்று கூடிய கூட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம், அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள்
மக்களிடையே பிரிவினையைத் தூண்டி, பழியை சனாதன தர்மத்தின் மீது போடுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்
தேர்தலின் போது மட்டும் கோவில் கோவிலாகப் படியேறி, நெற்றியில் விபூதி வைத்துக் கொள்ளும் உங்களின் கபட நாடகம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.