பெண் ஐஏஎஸ் அதிகாரி பெயரை கூறி மோசடி... கையும் களவுமாக பிடித்த நில நிர்வாக இணை ஆணையர்

x

சென்னை எழிலகத்தில் உள்ள நில அளவைத் துறையில் நில நிர்வாக இணை ஆணையராக இருப்பவர் பெண் ஐஏஎஸ் அதிகாரி செந்தாமரை. இவரது அலுவலகத்திற்கு வந்த இருவர் நிலம் சம்மந்தப்பட்ட ஆவணங்களை அவரிடம் கொடுத்துள்ளனர்.

அந்த ஆவணங்களில் தனது கையெழுத்து போலியாக பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து பெண் ஐஏஎஸ் அதிகாரி அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த அண்ணா சதுக்கம் போலீசாரிடம் இருவரையும் ஐஏஎஸ் அதிகாரி செந்தாமரை ஒப்படைத்தார்.

விசாரணையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வேடியப்பன் மற்றும் சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த பன்னாராம் என தெரியவந்தது.

மருந்தாளுநர்களான இருவருக்கும், தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த மருத்துவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட மித்ரன் என்பவர் பழக்கமானதாகவும், அவர் தான் இந்த ஆவணங்களை கொடுத்தார் என போலீஸிடம் தெரிவித்துள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரியின் சகோதரர் என கூறிய மித்ரன் போலி ஆவணங்களை கொடுத்ததும் உறுதியான நிலையில் 2 பேரை கைது செய்த போலீசார் மித்ரன் என்பவரை தேடி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்