"பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும்" - பாஜகவின் மெகா அறிவிப்பு

x

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்தால், கோகோ தீதி என்னும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் - தீபாவளி மற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுக்கு இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் - மேலும், மாதந்தோறும் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். ஜார்க்கண்ட் மாநில இளைஞர்களுக்காக 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் - ஜார்க்கண்ட் மாநிலத்தில் வினாத்தாள் கசிவில் தொடர்புடைய மாஃபியாக்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் - இருப்பினும் பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியின மக்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்