பாஜக மாவட்ட செயலாளர் அதிரடி கைது

x

சென்னை கீழ்கட்டளையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், பாஜக ஐ.டி. விங் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருடைய அலுவலகத்துக்கு கடந்த 31-ஆம் தேதி வந்த பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பையா, அவருடைய உறவினர் முத்தரசன், நங்கநல்லூர் மண்டல பாஜக தலைவர் ஜவகர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர், ராஜேஷைத் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் ரோந்து வந்ததை கண்டதும், அவர்கள்அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் காயம் அடைந்த ராஜேஷ், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாளையங்கோட்டையில் பதுங்கி இருந்த 3 பேரையும் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். நண்பர்களாக இருந்த ராஜேஷும், சுப்பையாவும் கட்சி பொறுப்பு கிடைத்த பிறகு, பிரிந்து தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சுப்பையா மது அருந்தும் புகைப்படம் அண்மையில் சமூக ஊடகத்தில் வெளியானதற்கு ராஜேஷ்தான் காரணம் என கருதி, அவரை தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்