பாஜக கூட்டத்தில் வாக்குவாதம்.. ஆவேசமாக வெளியேறிய அஸ்வத்தாமன் - சிதம்பரத்தில் பரபரப்பு
சிதம்பரத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
கடலூர் மாவட்டம் பு.முட்லூர் பகுதியில் தனியார் மண்டபத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மருதைக்கும், பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் தாமரை முருகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், மாவட்ட தலைவர் எந்த ஒரு தகவலும் கூறாமல், வெளியூர்களில் இருந்து கட்சியில் இல்லாத நிர்வாகிகளை அழைத்து வந்து கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ததாக எதிர்ப்பு தெரிவித்து, தாமரை முருகன் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படும் சூழல் இருந்ததால், கட்சியின் மாநில நிர்வாகி அஸ்வந்த் தமன் பாதியில் வெளியேறினார்.
Next Story