கலைஞர் நூற்றாண்டு விழா - திமுக சார்பில் பொறுப்பு அணிகள் அறிவிப்பு
கலைஞர் நூற்றாண்டு விழா - திமுக சார்பில் பொறுப்பு அணிகள் அறிவிப்பு
கலைஞர் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக திமுக சார்பில் பொறுப்பு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடுவதற்கு திமுக சார்பில் பொறுப்பு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக இளைஞரணி சார்பில் மாவட்டம் வாரியாக பேச்சுப்போட்டி நடத்தி 100 பேச்சாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் கலைஞர் Reels செய்து வெளியிட வேண்டும் என்றும் அனைத்து கல்லூரிகளிலும் திராவிட கொள்கைகளை கொண்ட மாணவர்கள் மூலம் தமிழ்நாடு மாணவர் மன்றம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக மாணவர் அணியுடன் இணைந்து மாணவர் மன்றம் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.