அண்ணாமலையை மறைமுகமாக தாக்கிய தமிழிசை.. தமிழக பாஜகவிற்குள் வெடிக்கும் பூகம்பம்

x

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு குறித்து விமர்சிக்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீண்டும் பேசியுள்ளார். பாஜகவில், தாம் மாநில தலைவராக இருந்தபோது, குற்றவாளிகளைக் கட்சிக்குள் சேர்க்கவில்லை என்றும், ஆனால், தற்போது சமூக விரோதிகள் பலருக்கும் பாஜகவில் பொறுப்புகள் வழங்கப்படுவதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நிலைப்பாடு குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது கட்சியில் குற்றவாளிகள் சேர்க்கப்படுவதாக அவர் கூறியிருப்பது பாஜகவினரிடையே மீண்டும் பேசு பொருளாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்