அமர்பிரசாத் ரெட்டியை மொத்தமாக கட்டம் கட்டிய போலீஸ் கதறும் மனைவி | BJP | Amar Prasad Reddy

x

இந்த வழக்கில், அமர்பிரசாத் ரெட்டி, வினோத், செந்தில், சுரேந்தர் ஆகிய 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி கானாத்தூர் போலீசார் ஆலந்தூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு சந்திரபிரபா முன் வந்தது. அப்போது சிறையில் இருந்த அமர்பிரசாத் ரெட்டி, உள்ளிட்ட 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் புலன் விசாரணை நடத்த வேண்டிய இருப்பதால், 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. போலீஸ் காவலில் செல்ல அனுமதிக்க கூடாது என பா.ஜ.க.வினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கப்படுவதாக கூறி உத்தரவிட்டார்


Next Story

மேலும் செய்திகள்