பாஜகவா? அதிமுகவா? தேர்தல் களமே பெரும் எதிர்பார்ப்பில்.. காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜக நிர்வாகிகள் கூட்டணி தொடர்பாக மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.கே. வாசனை, பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே வாசனின் இல்லத்தில் நேற்று இரவு நிகழ்ந்த இச்சந்திப்பில், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. குறிப்பாக, பாஜக கூட்டணியில் ஒரு மாநிலங்களவை, ஒரு மக்களவை தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று காலை 9:30 மணியளவில் வெளியிடுகிறார்.
Next Story