மாநிலங்களவையில் பிரதமர் மோடி உருக்கம்

அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவையில் இருந்து ஓய்வு பெறுவது அவைக்கும், நாட்டிற்கும் பேரிழப்பு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
x
அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவையில் இருந்து ஓய்வு பெறுவது அவைக்கும், நாட்டிற்கும் பேரிழப்பு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர்களான ப.சிதம்பரம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் ஏ.கே. ஆண்டனி, ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, சுப்பிரமணியன் சுவாமி, தமிழக எம்பிக்கள் டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி, நவநீதகிருஷ்ணன், எஸ் ஆர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 72 பேர் அடுத்த மாதத்துடன் பதவியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கான பிரிவு உபச்சார நிகழ்வு மாநிலங்களவையில் நடைபெற்றது. ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடியும், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் பிரியா விடை கொடுத்தனர். அப்போது பேசிய மோடி, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஏராளமான அனுபவம் கொண்டவர்கள் என பாராட்டினார். பல நேரங்களில் அனுபவ அறிவு கல்வியறிவு காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தது என குறிப்பிட்ட மோடி, அத்தகைய அனுபவம் வாய்ந்த நபர்கள் அவையில் இருந்து ஓய்வு பெறுவது மிகப் பெரிய இழப்பு என்றார். மேலும் புதிய உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர்களின் அனுபவத்தை கற்று அவர்களின் மரபை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்