வாடகை நிலுவை தொகை விவகாரம் - அமைச்சர் கே.என்.நேரு பதில்
உதகையில் வாடகை நிலுவை காரணத்திற்காக ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் தொகுதிக்கே போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் பேரவையில் தெரிவித்தார்.
வீட்டு வசதி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் உதகை சட்ட மன்ற உறுப்பினர் கணேஷ், உதகை மார்க்கெட் பகுதியில் வாடகை நிலுவை காரணத்திற்காக ஆயிரத்து 587 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளதாக கூறினார்.கடந்த ஆட்சியில் கடைகளுக்கான வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டதாகவும் கொரோணா காலத்தில் மூடப்பட்ட கடைகளுக்கும் நகராட்சி நிர்வாகம் வாடகை வசூலிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு, நீதிமன்றம் நிர்ணயம் செய்த கட்டணத்தை கூட செலுத்தாத்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மீண்டும் பேசிய காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் கணேஷ் இந்த பிரச்சினையால் தான் உதகைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைத்து கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் எனவும் கூறினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு நகராட்சிக்கு கட்ட வேண்டிய வாடகை நிலுவை தொகையை சட்டமன்ற உறுப்பினரே வசூலித்து கொடுத்தால் உடனே மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Next Story