ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வழக்கு விசாரணை
இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வழக்கில், 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வழக்கில், 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகக் கூறி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எதிராக, ஆதி தமிழர் மக்கள் கட்சி புகார் அளித்தது. அந்த புகாரின் பேரில் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு, மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. 2020ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ். பாரதி, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்ததுடன், வழக்கு விசாரணையை நாள்தோறும் நடத்தி விரைவாக தீர்வுகாண விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.இந்நிலையில்,
ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஆர்.எஸ். பாரதி சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி, விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். குற்றச்சாட்டு பதிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்ததுடன், இந்த மேல்முறையீடு மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
Next Story