"வலதுசாரிகளுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக செயல்பாடு" - பேஸ்புக் நிறுவன தலைவருக்கு ரவிசங்கர் பிரசாத் கடிதம்

வலதுசாரிகளுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக பேஸ்புக் நிறுவனம் செயல்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டி உள்ளார்.
வலதுசாரிகளுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக செயல்பாடு - பேஸ்புக் நிறுவன தலைவருக்கு ரவிசங்கர் பிரசாத் கடிதம்
x
பேஸ்புக் நிறுவனம் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி நேற்று வலியுறுத்தி இருந்த நிலையில், அந்த நிறுவனம் வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக, குறிப்பாக பா.ஜ.க.வுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டி உள்ளார்.  2019 தேர்தல் பிரச்சார காலங்களில் வலதுசாரி அமைப்பினரின் பதிவுகளை நீக்கியது மற்றும் அவர்களின் பதிவுகள் பலரை சென்றடையாமல் செய்ததாகவும் தமக்கு தகவல் வந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதவிர, வலதுசாரி அமைப்பினர் நீக்கப்பட்ட தங்கள் பதிவுகள் குறித்து முறையிட கூட அந்த அமைப்பு வாய்ப்புத் தரவில்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டி உள்ளார். வலதுசாரி தத்துவங்களை பரப்ப பேஸ்புக் நிறுவனம் தடையாக இருப்பதாகவும், அந்நிறுவனத்தின் தலைவர் Zuckerberg -க்கு எழுதியுள்ள கடிதத்தில் ரவிசங்கர் பிரசாத் சுட்டிக்காட்டி உள்ளார். 

பேஸ்புக் விவகாரம் - பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் சவால்

நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை ஏற்க பா.ஜ.க. தயாரா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. பேஸ்புக் நிறுவனருக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுதிய கடிதம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. வுக்கு உண்மையிலேயே நம்பகத்தன்மை மீது துளி அளவு மதிப்பு இருக்குமே ஆனால், பேஸ்புக் உடனான அக்கட்சியின் உறவு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு சம்மதிக்க வேண்டியது தானே என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜே வாலா கேள்வி எழுப்பியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்