கடன் வாங்கி, திரும்ப செலுத்தாத டாப் 50 நபர்கள் யார்? - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

வங்கியில் கடன் வாங்கிவிட்டு, திரும்ப செலுத்தாத டாப் 50 நபர்கள் யார்? என மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடன் வாங்கி, திரும்ப செலுத்தாத டாப் 50 நபர்கள் யார்? - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
x
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்தும் அதனால் வங்கி துறைகள் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதையும் குறிப்பிட்டார். நாட்டில் கடன் வாங்கிவிட்டு அதை திரும்ப செலுத்தாத டாப் 50 நபர்கள் யார் என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், ராகுல் காந்தியின் இந்த கேள்வி தவறான உள்நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பான வாதத்தில், அவையில் இருந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இந்த அமளிக்கிடையே பேசிய அனுராக் தாகூர், எஸ் வங்கியில் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளரின் பணமம் பாதுகாப்பாக இருப்பதோடு, நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்