பலம் இழக்கும் பாஜக

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியமைக்கும் நிலையில் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
பலம் இழக்கும் பாஜக
x
2014ல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த நிலையில் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 7  மாநிலங்களிலும் பாஜகவின் ஆதிக்கமே இருந்தது. 2014ல் 7 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த பாஜக, 2018ல் 21 மாநிலங்களில் ஆட்சி செய்யும் அளவுக்கு உயர்ந்தது.ஆனால் 2018ல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மிசோரம், பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 2014ல் 7 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த பாஜக, 2015ல் 13 மாநிலங்களாக உயர்ந்தது. பின்னர் 2017ல் 19 மாநிலங்கள், 2018ல் 21 மாநிலங்கள் என படிப்படியாக தன் வளர்ச்சியை நிலை நிறுத்தின. ஆனால் மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி என்ற கட்சி ஆட்சியமைத்த நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்திலும் ஆட்சியமைக்கும் நிலையை பாஜக இழந்துள்ளது. இதற்கு முன்பாக பாஜக வாய்ப்பை நழுவ விட்ட ராஜஸ்தானிலும், சத்தீஷ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் பாஜக உடனான உறவை முறித்துக் கொண்டது  தெலுங்கு தேசம் கட்சி. அதன்பிறகு மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியமைத்தார். இதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் சிவசேனா ஆட்சியமைத்துள்ள நிலையில் இப்போது பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 16 ஆக குறைந்துள்ளது. இதுபோன்ற அடுத்தடுத்த அரசியல் மாற்றத்தால் பாஜக பின்னடைவை சந்தித்திருக்கிறது. 2019 மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி இலக்கை பிடித்திருந்தாலும், மாநிலங்கள் அளவில் பாஜகவுக்கு ஒரு இறங்கு முகமாகவே உள்ளது என்ற கருத்தும் நிலவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்