உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்ப பெற வேண்டும் - மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
திருச்சி மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, சொத்து வரிகளை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, சொத்து வரிகளை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், வீட்டு வரி, சொத்து வரியை உயர்த்தியது தவறு என்று பாலகிருஷ்ணன் கூறினார்.
Next Story