வீட்டை காலி செய்யுமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் - ஆந்திர மாநில அரசு அதிரடி
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறி அதனை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறி அதனை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், அமராவதி நகரில், கிருஷ்ணா நதிக்கரையில், சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு உள்ளது. இந்நிலையில், இந்த வீடு முறைகேடாக கட்டப்பட்டதாகவும், இதுகுறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறும் கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். இதேபோல், கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள 27 வீடுகள் முறைகேடாக கட்டப் பட்டதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
Next Story