ரஜினி, கமல் வந்தால் சேர்த்துக் கொள்வோம் - பிரதமர் மோடி பரபரப்பு பேட்டி

தேர்தல் கூட்டணிக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வந்தால் சேர்த்துக் கொள்வோம் என, பிரதமர் மோடி தெரிவித்தார்.
ரஜினி, கமல் வந்தால் சேர்த்துக் கொள்வோம் - பிரதமர் மோடி பரபரப்பு பேட்டி
x
டெல்லியில் A.N.I செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவரிடம், தென்னிந்தியாவில் கால் பதிக்கும் வகையில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்கும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மோடி, தங்கள் அடித்தளத்தை விரிவுபடுத்த தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும், தங்களுடன் சேர விரும்புபவர்களை அரவணைத்து சேர்த்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இது, பிராந்திய உணர்வுகளை வலுப்படுத்தும் தங்கள் நோக்கத்துடன் தொடர்புடையது எனவும் மோடி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்