"நிலத்தை அபகரித்ததாக கூறுவது தவறு" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
நிலத்தை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
நிலத்தை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். உசிலம்பட்டி பகுதியில் உள்ள நிலத்தை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அபகரித்ததாக கூறி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நடந்த சம்பவங்கள் பற்றி தெரிந்து கொள்ளாமல் இதுபோல் அவதூறு பரப்புவது அரசியல் முதிர்ச்சிக்கு அழகல்ல என தெரிவித்துள்ளார். யார் சொத்துக்கும் இதுவரை ஆசைப்பட்டதில்லை என கூறிய அவர், இது மற்றவர்களின் குடும்ப பிரச்சினை என்பதால் அவர்கள் அதை நீதிமன்றத்தின் மூலம் தீர்த்துக் கொள்ளட்டும் என தெரிவித்துள்ளார். தவறான தகவல்கள் மூலம் தனது பெயருக்கு பங்கம் விளைவிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story