"முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க நாடு துணை நிற்கும்" - பிரதமர் மோடி

முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க நாடு துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க நாடு துணை நிற்கும் - பிரதமர் மோடி
x
மான் கி பாத் நிகழ்ச்சிக்காக நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, அனைவருக்கும் ரக்‌ஷாபந்தன் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார்.  தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்று குறிப்பிட்ட பிரதமர் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது என்று தெரிவித்தார். வெள்ளத்தில் சிக்கிய கேரள மக்களைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டதாகவும், மீட்பு பணிகளில் முப்படை ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.  

மக்களவையில் நிறைவேறிய முத்தலாக் மசோதா இந்தக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனதாக பிரதமர் குறிப்பிட்டார். முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைப்பதற்கு நாடு முழு மனதோடு துணை நிற்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். எந்த ஒரு நாகரீகமான சமூகமும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை பொறுத்து கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட பிரதமர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்