தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்... வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்க இலங்கை அரசு திட்டமிட்டு செயல்படுவதாக தோன்றுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்... தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்து தாக்கப்படுவதும், கடற் கொள்ளையர்களால் பாதிக்கப்படுவதும் இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்று தெரிவித்த அவர், இதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்றும், வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்வதுடன், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்...
Next Story