"தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் அறிவிப்பு ஏன்?" - மத்திய இணையமைச்சர் கேள்வி
தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீரை திறந்து விடுவதாக அம்மாநில துணை முதல்வர் அறிவித்தது ஏன் என மத்திய இணையமைச்சர் ராஜுவ் சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த இரண்டு மாத காலத்திற்குள் 50 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் 16 மாவட்டங்கள் வறட்சியால் போராடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். கர்நாடக விவசாயிகள் துயரத்தில் இருக்கும் போது தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விடுவதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அறிவித்துள்ளார். திமுகவின் அழுத்ததின் காரணமாகவே டி.கே.சிவகுமார் இவ்வாறு அறிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Next Story