பகீர் கிளப்பிய மாணவிகளின் ஆபாச வீடியோ - கல்லூரி மாணவிகளிடம் குஷ்பூ விசாரணை

x

கர்நாடாகவில் கல்லூரி மாணவிகளை சக மாணவிகளே ஆபாசமாக வீடியோ எடுத்த விவகாரத்தில், கல்லூரி மாணவிகளிடம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பூ விசாரணை நடத்தினார்.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாணவிகளை கழிவறையில் வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், மூன்று மாணவிகளை கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்த நிலையில், விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உடுப்பி மாவட்டத்திற்கு வருகை தந்த நடிகையும், தேசிய மகளிர் ஆணையருமான குஷ்பூ, சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். போலீசாரிடம் இருந்து முதல் தகவல் அறிக்கையை பெற்ற குஷ்பூ, கல்லூரி மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்