பாஜக வேட்பாளரின் பாதுகாப்பு வாகனம் மோதி பலியான குழந்தை
உத்தரபிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில், பாஜக வேட்பாளர் கரண் பூஷன் சிங்கின் பாதுகாப்பு வாகனம் மோதியதில், குழந்தை உள்பட 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்தபோது கரண் பூஷண் சிங் காரில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர், பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷண் சிங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story