தூர்வாராத ஆறுகள்- கடலில் வீணாகும் உபரிநீர்- விவசாயிகள் அதிருப்தி

x

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை காரணமாக, ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், நீரை சேமிக்க முடியாமல் உபரிநீர் கடலில் கலப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசலாறு, நண்டல் ஆறு, திருமலை ராஜன் பட்டி ஆறு, உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் நீரை சேமிக்க முடியாமல் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. காரைக்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகளை முறையாக தூர்வாராததே முக்கிய காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்