பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த பயங்கரம்.. ஒரே குடும்பத்தில் இருவர் பலி.. 4 பேர் படுகாயம்

x

பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த பயங்கரம்.. ஒரே குடும்பத்தில் இருவர் பலி.. 4 பேர் படுகாயம்.. பீகாரில் ஷாக்

பீகாரில், சத் பூஜை முடித்து வீடு திரும்பிய இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், இன்று அதிகாலை சத் பூஜைக்காக சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அவர்களை நோக்கி பக்கத்துவீட்டுக்காரர் ஆசிஷ் சவுத்ரி என்பவர், திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில், 2 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, ஆசிஷ் சவுத்ரிக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்