இன்று பரபரப்பான ம.பி. தேர்தல் நடக்கும் வேளையில் வெளியான பேரதிர்ச்சி தகவல்

x

நவம்பர் 17ல் நடைபெற உள்ள மத்திய பிரதேச சட்டமன்ற

தேர்தலில், ஆளும் பாஜகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும்

இடையே கடும் போட்டி நிலவுகிறது.

230 தொகுதிகளில் மொத்தம் 2,534 வேட்பாளர்கள்

போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாணப்

பத்திரங்களை அலசி, விரிவான ஆய்வறிக்கை ஒன்றை

ஏ.டி.ஆர் அமைப்பு வெளியிட்டுள்ளது.

472 வேட்பாளர்கள் மீது, அதாவது 19 சதவீத வேட்பாளர்கள்

மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அந்த

அறிக்கை கூறுகிறது.

2018 சட்ட மன்ற தேர்தலில், 17 சதவீத வேட்பாளர்கள்

மீது கிரிமினல் வழக்குகள் இருந்தது ஒப்பிடத்தக்கது.

291 வேட்பாளர்கள் மீது, அதாவது 11 சதவீதத்தினர் மீது

கொலை குற்றம், கொலை முயற்சி போன்ற தீவிர வகை

கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பாஜக வேட்பாளர்களில் 28 சதவீதத்தினர் மீது, அதாவது

65 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 10 சதவீதத்தினர்

மீது தீவிர வகை குற்ற வழக்குகள் உள்ளன.

காங்கிரஸ் வேட்பாளர்களில் 53 சதவீதத்தினர் மீது, அதாவது

121 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

27 சதவீதத்தினர் மீது தீவிர வகை கிரிமினல் வழக்குகள்

உள்ளன.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் 39 சதவீதத்தினர் மீது,

அதாவது 26 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

27 சதவீதத்தினர் மீது தீவிர வகை கிரிமினல் வழக்குகள்

உள்ளன.

மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்

மீது கிரிமினல் வழக்குகள் உள்ள தொகுதிகள் ரெட் அலெர்ட்

தொகுதிகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளில் 79 தொகுதிகள், அதாவது 34 சதவீத தொகுதிகள் ரெட் அலெர்ட் தொகுதிகளாக வகை படுத்தப்பட்டுள்ளன.

49 சதவீத வேட்பாளர்களின் கல்வித் தகுதி, 5ஆவது முதல்

12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வியாக உள்ளது.

44 சதவீத வேட்பாளர்கள் பட்டதாரிகள்.

பாஜக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 10.46 கோடி

ரூபாயாகவும், காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து

மதிப்பு 13.69 கோடி ரூபாயாகவும் உள்ளது. ஆம் ஆத்மி

கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 2.76

கோடி ரூபாயாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்