சிறுமியை பாதித்த கொடூர நோய்... கண்ணீர் மல்க ஆட்சியரிடம் வந்த பெற்றோர்
சிறுமியை பாதித்த கொடூர நோய்... கண்ணீர் மல்க ஆட்சியரிடம் வந்த பெற்றோர்
காரைக்காலில் தசை சிதைவு நோயால் கால்கள் செயலிழந்த ஒன்பது வயது சிறுமிக்கு மருத்துவ உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டம்
டி.ஆர் பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்த சதீஷ் - அமலா தம்பதியின் 9 வயது பெண் குழந்தை நதினா. அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் நதினாவுக்கு, 3 ஆண்டுகளுக்கு
முன்பு தசை சிதைவு நோய் ஏற்பட்டு 2 கால்களும் செயலிழந்தன. இதனால், சிறுமியால் நடக்க முடியாததால், நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் சிகிச்சை அளித்துள்ளனர். மேல்
சிகிச்சைக்கு தங்களிடம் நிதி இல்லாததால், புதுச்சேரி அரசு உதவ வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.
Next Story