"ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.20 ஆயிரம்.." - மிரளவிட்ட அறிவிப்பு
இலங்கையில் குடும்பம் ஒன்றுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதி அளித்துள்ளார்.
இலங்கையில் அதிபர் தேர்தல் போட்டியிடும் அவர், திருகோணமலையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அரசின் கொள்கைகளால் லட்சக்கணக்கானோர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று கூறினார். குடும்பம் ஒன்றுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.
Next Story