பிரதமரின் பாதுகாப்புக்குழு எஸ்பிஜி இயக்குநர் காலமானார்
பிரதமரின் பாதுகாப்புக் குழுவான எஸ்பிஜி-ன் இயக்குநர் அருண் குமார் சின்ஹா காலமானார். சிறப்பு பாதுகாப்புக் குழுவின் இயக்குநர் அருண்குமார் சின்ஹா, அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 1987ஆம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியான இவர், எஸ்பிஜியின் இயக்குநராக பணியாற்றினார். கடந்த மே 30 ஆம் தேதி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பு, ஒரு ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்க்கது.
Next Story