அரவணை சம்மந்தப்பட்ட விவகாரம்.. ஸ்ட்ரிக்டாக சொன்ன தேவசம் போர்டு | Sabarimala | Thanthitv

x

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 2022-2023 ஆண்டு மகர விளக்கு பூஜை சீசனில் அரவணையில் அதிக அளவு பூச்சி மருந்து இருப்பதாக கேரள அரசு அறிக்கை வெளியிட்டது. இதற்கு பூச்சிகொல்லி கலந்த ஏலக்காய் என தெரியவந்தது.ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவுபடி நடத்தப்பட்ட சோதனையில் அரவணை பாதுகாப்பானது என சொல்லப்பட்டாலும், 6 மாதங்கள் ஆனதால் உண்ண முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 6.65 லட்சம் அரவணை டின்களையும் அழிக்க நவம்பரில் உச்சநீதிமன்றம் அனுமதித்தது. இதனையடுத்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான அரவணையை அறிவியல் பூர்வமாக அழிக்க தேவசம் போர்டு டெண்டர் விட்டது. சபரிமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், அரவணையை பம்பைக்கு வெளியே கொண்டு சென்று அழிக்க வேண்டும். அரவணை டின்களில் ஐயப்பன் படம் இருப்பதால் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் அவற்றை அழிக்க வேண்டும் என்றும் தேவசம் போர்டு கூறியிருந்தது. இந்நிலையில் ஏட்டுமனூரிலுள்ள தனியார் நிறுவனம் அரவணைகளை உரமாக மாற்ற ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது....


Next Story

மேலும் செய்திகள்