சபரிமலை அரவணை விவகாரம் "பூச்சிமருந்து கலந்த ஏலக்காய்" - நீதிமன்றம்போட்ட அதிரடி உத்தரவு

x

சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த மகர விளக்கு பூஜை சீசனின்போது, அரவணையில் அதிக அளவு பூச்சி மருந்து இருப்பதாக அரசு அறிக்கை வெளியிட்டதால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த ஜனவரி மாதம் அரவணை உற்பத்தி நிறுத்தப்பட்டது. பூச்சி மருந்து கலந்ததாக கூறப்பட்ட 6.65 லட்சம் அரவணை டின்கள் தனியாக வைக்கப்பட்டன. பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்ட சோதனையில், அரவணை சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அரவணை தயாரிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் பயன்படுத்தாவிடில், அது உண்ண முடியாததாகிவிடும். இந்நிலையில், பயன்படுத்தப்படாமல் உள்ள 6.65 லட்சம் அரவணை டின்களை அப்புறப்படுத்தி அழிக்க கேரள அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு அனுமதி கோரியது. மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், பூச்சிக்கொல்லி மருந்து கலந்த ஏலக்காயை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அரவணையை அழிக்க அனுமதி அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்