குழந்தைகளுக்கு வாடகை 300 ரூபாய்..! பிச்சை எடுக்கும் பெண் கும்பல்.. அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்
காரைக்கால் டவுன் பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட பெண்கள், கை குழந்தைகளுடன் பொதுமக்களை தொந்தரவு செய்து யாசகம் எடுத்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, குழந்தைகளுடன் யாசகம் எடுத்த 20க்கும் மேற்பட்ட பெண்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், செம்மரான் கோயில் பகுதியில் இருந்து ஒரு குழுவாக வந்து காரைக்காலில் பிச்சை எடுப்பது தெரியவந்தது. குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் கொடுத்து வாடகைக்கு எடுத்து யாசகம் எடுப்பதாக புகார் எழுந்த நிலையில், அந்த குழந்தைகள் கடத்தப்பட்ட குழந்தைகளா? அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story