"அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்கவும்" - கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

x

அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விடக்கோரி கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை, காணொலி வாயிலாக நடைபெற்ற காவேரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், காவிரியில் 4 ஆயிரம் கன அடிக்கு குறைவாகவே கர்நாடகா தண்ணீர் திறப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அதிகாரிகள் முறையிட்டனர். அதற்கு, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து குறைவாக இருப்பதால், தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா தரப்பு மறுப்பு தெரிவித்தது. அதை ஏற்க மறுத்த காவிரி ஒழுங்காற்று குழு, அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்