"ஹிந்தி படியுங்கள்"... சீண்டிய நிதிஷ்குமார் - ஆளுநர் தமிழிசை பரபரப்பு கருத்து
இந்தியா கூட்டணி தலைவர்களில் ஒருவரான நிதிஷ்குமார், தென் மாநில தலைவர்கள் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியதின் அவசியத்தை மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்வார் என்று நினைப்பதாக, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.
கனகசபை மீது ஏறி, சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, மற்றொரு மொழியை கற்றுக் கொள்வதால் தமிழ் மொழி அழிந்து விடாது என்று கூறினார்
Next Story