புதுவையில் அதிரடி மாற்றம் - வெளியான அதிமுக்கிய அறிவிப்பு
புதுச்சேரி பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஏ.எப்.டி மைதானத்தில் இருந்து தற்காலிகமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 31 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இன்று முதல், பணிகள் முடியும் வரை புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி. மைதானத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், தற்காலிக பேருந்து நிலையம் அமைந்துள்ள ஏ.எஃப்.டி மைதானத்தில் கழிவறை, குடிநீர் வசதி, உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் பகுதி பகுதியாக நின்று செல்வதற்கான ஏற்பாடுகள் புதுச்சேரி நகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே பேருந்துகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே நின்று செல்ல வேண்டும் என்றும், அதேபோல் ஆட்டோ மற்றும் டெம்போக்கள் அவர்களுக்கான இடத்தில் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் 3 மாதத்தில் முடிக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.