புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் - எதிர்கட்சிகள் போட்ட திட்டம்

x

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் - எதிர்கட்சிகள் போட்ட திட்டம்

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் புதுச்சேரியின் பொறுப்பு துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் காலை 9.30 மணிக்கு தமிழில் உரையாற்ற உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் தமிழில் உரையாற்றும் இரண்டாவது ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவார். ஆளுநர் உரை முடிந்த பின்னர், இரவு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, நாளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான‌மும், பின்னர் 2-ஆம் பட்ஜெட் தாக்கலும் நடைபெற உள்ளது. அப்போது, நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 12 ஆயிரத்து 700 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதனிடையே மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணித்தது உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்