இன்று முதல் அதிரடியாக உயர்ந்த கட்டணம் - புதுவை மக்கள் விடுத்த எச்சரிக்கை

x

இன்று முதல் அதிரடியாக உயர்ந்த கட்டணம் - புதுவை மக்கள் விடுத்த எச்சரிக்கை

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கான முன் கட்டணம் 2 ரூபாய் 25 காசுகளில் இருந்து 2 ரூபாய் 70 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் 3 ரூபாய் 25 காசுகளாக இருந்து 4 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட மின்கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ள மக்கள், அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், மின்கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சியினர், வணிகர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்