வீட்டுக்கு வந்த போஸ்ட்... பறிபோன ரூ.1.22 லட்சம் | puducherry
பிரான்ஸ் நாட்டு குடியுரிமை வாங்கி தருவதாக கூறி, போலி சான்றிதழ் வழங்கி ஏமாற்றியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி, அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாலமுருகனிடம், மிலன் அருள்மணி என்பவர், பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை சான்றிதழ் பெற்று, வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடமிருந்து 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். தொடர்ந்து பாலமுருகனுக்கு தபாலில் பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழ் வந்ததையடுத்து, வெளியுறவு துறை அமைச்சகத்திற்க்கு சென்று பார்த்த போது, அது போலி சான்றிதழ் என தெரியவந்தது. இதனை அடுத்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மிலன் அருள்மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story