புதுச்சேரியில் எச்சரிக்கை.. மதுப்பிரியர்களை அதிர்ச்சியாக்கிய உத்தரவு

x

புதுச்சேரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தனி நபருக்கு சாராயம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாராயக்கடை உரிமையாளர்களுக்கு கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி உள்ள சாராயக்கடைகளில் புதுச்சேரி அரசின் வடிசாராய ஆலையில் இருந்து வழங்கப்பட்ட சாராயம் மட்டுமே விற்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அதன் வீரியத்தை ஆய்வு செய்யவும், சாராயத்தில் வேறு ஏதேனும் கலப்படம் செய்யப்பட்டு உள்ளதா? என்பதை கண்காணிக்கவும்

கலால் ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்